திறந்தே கிடக்கும் விடுதி 'கேட்' :சமூக விரோதிகள் அட்டூழியம்
திறந்தே கிடக்கும் விடுதி 'கேட்' :சமூக விரோதிகள் அட்டூழியம்
UPDATED : ஆக 23, 2026 06:56 PM
ADDED : ஆக 23, 2026 06:51 PM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: விடுதியில் கேட் மூடாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவருக்கான சமூகநீதி விடுதி கடந்த, 2009 ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த விடுதியில் சில மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர். இங்கு பாதுகாப்பிற்காக முகப்பில் இரும்பு கேட் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரும்பு கேட் மூடாமல் எப்போதும் திறந்த நிலையிலேயே இருந்து வருகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள ஆடு,மாடுகள் விடுதி வளாகத்தில் உலா வருகின்றன. இரவு நேரத்தில் மதுபபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
