ADDED : நவ 30, 2025 06:19 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்தது.
நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்; வர்த்தக சங்க செயலாளர். நேற்று பெய்த மழை காரணமாக இவருக்கு சொந்தமான, 50 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது.
அந்த வீட்டில் யாரும் வசிக்காததாலும், சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
