/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெசவாளர்களுக்கு வீடு கட்ட கடன் கடலுார் கலெக்டர் தகவல்
/
நெசவாளர்களுக்கு வீடு கட்ட கடன் கடலுார் கலெக்டர் தகவல்
நெசவாளர்களுக்கு வீடு கட்ட கடன் கடலுார் கலெக்டர் தகவல்
நெசவாளர்களுக்கு வீடு கட்ட கடன் கடலுார் கலெக்டர் தகவல்
ADDED : பிப் 15, 2024 06:32 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கூட்டுறவு அமைப்பு நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடு கட்ட கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட கூட்டுறவு அமைப்பு நெசவாளர்களுக்கு, மானியத்துடன் ரூ. 4 லட்சம் வழங்கப்படும். பயணாளிகள் வீடு கட்டடப்பணிகள் முடிவுற்ற நிலைக்கு ஏற்ப 4 தவணைகளாக பணம் விடுவிக்கப்படும். நெசவாளர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், குறைந்த பட்சம் 300 சதுர அடி நிலம் சொந்தமாக பட்டா இருக்க வேண்டும். வேறு திட்டத்தில் பயனாளியாக இருத்தல் கூடாது. கூட்டுறவு அமைப்பு சாராத சங்க நெசவாளர்கள் அரசின் விலையில்லா மின்சார திட்டத்தில் பயன் பெறுபவராகவும், மத்திய அரசு வழங்கும் நெசவாளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

