வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
ADDED : மார் 29, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
கடலுார்: வீட்டின் கதவை உடைத்து, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ஹேமலதா,52; இவரது தாய் ராசாத்தி அதே பகுதியில் வசிக்கிறார். கடந்த, 20 நாட்களுக்கு முன்பு ராசாத்தி, தனது கணவருடன் சென்னை சென்றார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஹேமலதா திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, மர்ம நபர்கள் பீரோவில் இருந்த, 950 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. அருகில் உள்ள, 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரிந்தது.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
