/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணிமுக்தாற்றில் வெள்ளம் இடிந்து விழுந்த வீடுகள்
/
மணிமுக்தாற்றில் வெள்ளம் இடிந்து விழுந்த வீடுகள்
ADDED : டிச 15, 2024 06:52 AM

விருத்தாசலம் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால், படித்துறை பகுதியில் இருந்த 10 வீடுகள் இடிந்து விழுந்தன.
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் அருகே உள்ள சன்னதி வீதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீதி மணிமுக்தாறு கரையோரம் படித்துறை பகுதியில் அமைந்துள்ளது.
தொடர் மழை காரணமாக, கடந்த பத்து நாட்களுக்கு மேல், மணிமுக்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சன்னதி வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் நேற்று இடிந்து விழுந்தன. மேலும், பழமைவாய்ந்த படித்துறை கற்களும் சரிந்து வருகின்றன வெள்ளத்தால் வீடுகளை இழந்தோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
வீடுகளை இழந்தோர் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மணிமுக்தாற்றின் கரையோரம் படித்துறை பகுதியில் அமைந்துள்ள வீடுகள் ஒவ்வொன்றாக இடிந்து விழும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.