/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வறட்டு இருமலை சமாளிப்பது எப்படி டாக்டர் கலைக்கோவன் 'அட்வைஸ்'
/
வறட்டு இருமலை சமாளிப்பது எப்படி டாக்டர் கலைக்கோவன் 'அட்வைஸ்'
வறட்டு இருமலை சமாளிப்பது எப்படி டாக்டர் கலைக்கோவன் 'அட்வைஸ்'
வறட்டு இருமலை சமாளிப்பது எப்படி டாக்டர் கலைக்கோவன் 'அட்வைஸ்'
ADDED : ஏப் 02, 2025 06:14 AM

குளிர்காலத்தில் இருந்து கோடை காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். குளிர் விலகி, தினமும் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் பலருக்கு இருமல், தொண்டை கரகரப்பு, சளி தொல்லை அதிகரித்து வருகிறது.
இந்த தொற்று ஏன் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து கடலுார் டாக்டர் கலைக்கோவன் கூறியதாவது:
மனிதர்களிடையே தற்போது பரவும் வறட்டு இருமல் ஒரு 'மினி கொரோனா' போன்றது. பருவநிலை மாற்றத்தினால் ஆண்டுதோறும் வரும் தொற்று தான்.
ஆனால், தற்போது உடல் நிலையை பாதிக்க சில காரணங்கள் உள்ளன. இயந்திர உலகத்தில் மக்கள் உறங்கும் நேரம் குறைந்துவிட்டது.
வெகுநேரம் கண்விழித்து மொபைல் போன் பார்ப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சத்தான உணவு இல்லாத காரணத்தினாலும், உணவு பழக்கங்கள் மாறியதாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
முன்பெல்லாம் பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுமுறை விட்டு விட்டால் உணவு கூட சாப்பிடாமல் விளையாடுவார்கள்.
ஆனால், தற்போது அப்படியல்ல. அறையை விட்டு வெளியே செல்வதில்லை. உடல் ரீதியான நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
இதுபோன்ற வறட்டு இருமல் தொற்று வந்து விட்டால் தங்களை ஓரளவு தனிமை படுத்திக்கொண்டு ஓய்வு எடுத்து உறங்க வேண்டும்.
மற்றவர்களுக்கு எளிதாக தொற்றும் வாய்ப்பு அதிகம். அதே சமயத்தில் பீதியடையும் அளவுக்கு ஒன்றும்
இல்லை. இதுபோன்று தொற்றுள்ளவர்கள் கோடை காலம் என்பதால் தர்பூசணி, இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் இந்த பொருட்கள் சாப்பிடும்போது நமது உடலை மேலும் பலவீனமாகும். பொதுவாக நோய் தொற்று தென்பட்டால் வெண்ணீர்தான் குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோய், கிட்னி பிரச்னை உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் சூடான தண்ணீரையே குடித்தால் தொற்றில் இருந்து விடுபடலாம்.

