ADDED : ஜன 30, 2026 07:08 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் தமிழக போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனித நேய வார விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற டி.எஸ்.பி.மனிஷா அர்ஜூனன் சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது; வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தேசத்தின் அடையாளம். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக மனிதநேயத்துடன் வாழ்வதே நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணம். அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லுாரி சேர்மன் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
