/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறன் மனைவி தாக்கு கணவர், கொழுந்தன் கைது
/
மாற்றுத்திறன் மனைவி தாக்கு கணவர், கொழுந்தன் கைது
ADDED : மார் 26, 2025 07:19 AM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி மனைவியை தாக்கிய கணவரும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி தனலட்சுமி, 38. மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தனலட்சுமிக்கும், கணவரின் சகோதரர் மணிகண்டன் வீட்டிற்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் படுத்திருந்த தனலட்சுமியை, கணவர் முருகன், கொழுந்தனார் மணிகண்டன் இருவரும் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தனலட்சுமி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, முருகன், 42, மணிகண்டன், 35, இருவரையும் கைது செய்தனர்.