ADDED : டிச 25, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்,; குமராட்சியில், குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் அருகே சிலம்பூரை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 32; இவரது மனைவி சத்யா, 32; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், கணவன் மனையிடையே ஏற்பட்ட தகராறில், கோபித்துக் கொண்டு, குமராட்சி அடுத்த மேல்தவர்த்தம்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து சத்யா தங்கினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெற்றிச்செல்வன், போதையில் மாமனார் வீட்டிற்கு வந்து, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். மறுத்ததால், சத்யாவை உருட்டுக் கட்டையால் தாக்கினார்.
சத்யா கொடுத்த புகாரில், குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து, வெற்றிச் செல்வனை கைது செய்தனர்.