ADDED : ஜன 02, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
கிள்ளை: மனைவியை தாக்கிய, கணவரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை முடசல் ஓடை, சூர்யா நகரை சேர்ந்தவர் ஜெயசூரியா, 23; இவரது, மனைவி கற்பகம், 22; காதலித்து திருமணம் செய்து கொண்ட, இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே குடும்பம் சம்மந்தமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. கடந்த டிச., 30ம் தேதி மீண்டும் அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, ஜெயசூரியா, கற்பகத்தை தாக்கி, பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து, கற்பகம் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக் குப் பதிந்து, ஜெயசூரியாவை, கைது செய்தனர்.
