/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடத்தையில் சந்தேகித்து மனைவியை வெட்டிய கணவன் கைது
/
நடத்தையில் சந்தேகித்து மனைவியை வெட்டிய கணவன் கைது
ADDED : நவ 23, 2024 06:20 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 38; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சோனியா, 36. இவர்களுக்கு 13 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனியா திருப்பூரில் உள்ள தனியர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக அவர், வீட்டிற்கு வந்தார். அப்போதில் இருந்து மணி, சோனியா நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவர்களுக்குள் பிரச்னை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் சோனியாவிடம் மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த மணி கத்தியால் சோனியாவின் தலை மற்றும் இடது கையில் வெட்டினார். படுகாயமடைந்த சோனியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சோனியா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணியை கைது செய்தனர்.