தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை


ADDED : அக் 11, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி : திட்டக்குடி அருகே குடும்ப பிரச்னையில் கணவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்தார்.

திட்டக்குடி அடுத்த கொடிகளம், தோப்பு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்மணி, 65. இவரது மனைவி மீனாட்சி. இவர் வீட்டில் உள்ள பீரோவில் பணம் வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை கட்டடம் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க பீரோவை திறந்து பணம் எண்ணும்போது குறைந்துள்ளது.

கணவர் தமிழ்மணியிடம் கேட்டபோது, நான் மதுபாட்டில் வாங்க எடுத்ததாகக் கூறினார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

மனமுடைந்த தமிழ்மணி வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு அரியலுார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us