ADDED : ஆக 18, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த மேல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்.45; அரசு பஸ் டிரைவர். கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி இளவரசி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.