ADDED : மே 23, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
வடலுார்: கணவர் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தார்.
வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 53; கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 18ம் தேதி காலை வீட்டை விட்டு சென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கணவர் மாயமானது குறித்து, விஸ்வதான் மனைவி ஜெயந்தி, வடலுார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
