ADDED : செப் 04, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சக்திவேல்,38; துணி வியாபாரி. இவரது மனைவி கயல்விழி, இவர்களுக்கு திருமணமாகி ஆறரை ஆண்டு ஆகிறது.
கடந்த 2ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கயல்விழி,28; கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை தேடிவருகின்றனர்.
