ADDED : அக் 17, 2026 09:24 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: மருத்துவமனைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் நாகராஜன்,61; தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வீட்டில் இருந்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி அழகம்மாள்,51; கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வருகின்றனர்.
