/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் நிலைக்குழு ஆய்வு
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் நிலைக்குழு ஆய்வு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் நிலைக்குழு ஆய்வு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் நிலைக்குழு ஆய்வு
ADDED : மார் 20, 2024 05:31 AM

விருத்தாசலம் : சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் பாடல் பெற்ற தலங்களில் உள்ள பழங்கால சிற்பங்கள், துாண்கள், கோபுரங்களில் செடி கொடிகள் முளைத்துள்ளதா, அவற்றின் நிலைப்புத்தன்மை ஆகியவற்றை நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஹிந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் பரணிதரன் தலைமையில், தொல்லியல் துறை ஆலோசகர் தண்டபாணி, தனி தாசில்தார் செந்தில்வேல், உதவி கோட்டப் பொறியாளர் அசோகன், மண்டல ஸ்தபதி சரவணன் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.t
அதில், துாண்களில் எண்ணெய் கரை உள்ளதா, கோபுரங்களில் செடி கொடிகள் மண்டியுள்ளதா, கோவிலின் பராமரிப்பு குறித்து புகைப்படம் மூலம் பதிவு செய்தனர். இவற்றை ஒரு வாரத்திற்குள் சீரமைத்து, கோவில் நிர்வாகம் சார்பில் மீண்டும் புகைப்படம் எடுத்து வழங்க வேண்டும். இவ்விரு புகைப்படங்களும் வழக்கு விசாரணையின்போது, ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

