திட்டங்களை கொண்டு வருவேன்: தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
திட்டங்களை கொண்டு வருவேன்: தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
ADDED : ஏப் 11, 2026 04:49 PM

பரங்கிப்பேட்டை: கீரப்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரதுார்சாவடி, பொன்னங்கோவில், சாத்தமங்கலம், சக்தி விளாகம், அள்ளூர், பூதங்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்; புவனகிரி தொகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்று தொகுதி தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுத்தேன். 2021ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டேன். அப்போது, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், சரியான முறையில் பிரசாரம் செய்யமுடியாமல் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இத்தேர்தலில் தி.மு.க., வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும். தொகுதிக்க தேவையான திட்டங்களை கொண்டு வருவேன். அதனால், என்னை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற எனக்கு ஆதரவு தரவேண்டும் என கேட்டு கொண்டார்.
அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, வி.சி.கட்சி மாவட்டசெயலாளர் அரங்க தமிழ்ஒளி, காங்., வட்டார தலைவர் செழியன், மாவட்ட செயலாளர் சரவணன், தே.மு.தி.க., புவனகிரி தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர், ஒன்றிய செயலாளர் சித்தன், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்டக்குழு வாஞ்சிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
