/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நான் மட்டுமே விசாரிப்பேன் பெண் இன்ஸ்., அடாவடி
/
நான் மட்டுமே விசாரிப்பேன் பெண் இன்ஸ்., அடாவடி
ADDED : ஏப் 23, 2025 05:35 AM
மாவட்டத்தில் உள்ள பிரதான நகரின் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணிபுரிகிறார். இவரிடம், குடும்ப தகராறு, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்னைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
எத்தனை வழக்குகள் வந்தாலும் நான் மட்டுமே விசாரிப்பேன். வேறு யாரும் விசாரிக்கக் கூடாது என்று கூறுகிறாராம். விடுமுறைக்கு சென்றால் கூட சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு உள்ளிட்டோர் யாரையும் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்காமல் கல்லா கட்டி வருகிறார். புகார் கொடுத்து பல நாட்கள் அப்படியே காத்திருந்தாலும் நியாயம் கிடைப்பதில்லை எனவும், அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர். இப்பிரச்னைக்கு மாவட்ட காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

