இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்: சபா ராஜேந்திரன் நெகிழ்ச்சி
இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்: சபா ராஜேந்திரன் நெகிழ்ச்சி
ADDED : ஏப் 10, 2026 07:48 PM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை, தி.மு.க, வேட்பாளர் சபா ராஜேந்திரன் சந்தித்து ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்ஒரு கட்டமாக, நெய்வேலி இந்திரா நகரில் உள்ள பள்ளி வாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவருக்கு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சபா ராஜேந்திரன் பேசியதாவது:
சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தமிழக முதல்வர் இருந்து வருகிறார். நெய்வேலி தொகுதியில் நான் எப்போதுமே உங்களில் ஒருவனாக, பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறேன். மற்றவர்கள் தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வருவார்கள். பிறகு சென்று விடுவார்கள். ஆனால் நான் உங்கள் வீட்டு பிள்ளை. நீங்கள் என்னை ஜெயிக்க வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், தர்கா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்களின் முக்கிய பிரமுகர்கள் சபா ராஜேந்திரன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. பிரசாரத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
