/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் அணு உலை அமைத்தால் போராட்டம் மாஜி., அமைச்சர் சம்பத் எச்சரிக்கை
/
நெய்வேலியில் அணு உலை அமைத்தால் போராட்டம் மாஜி., அமைச்சர் சம்பத் எச்சரிக்கை
நெய்வேலியில் அணு உலை அமைத்தால் போராட்டம் மாஜி., அமைச்சர் சம்பத் எச்சரிக்கை
நெய்வேலியில் அணு உலை அமைத்தால் போராட்டம் மாஜி., அமைச்சர் சம்பத் எச்சரிக்கை
ADDED : மார் 05, 2024 06:06 AM
கடலுார்: நெய்வேலியில் அணு உலை அமைக்கப்படும் என அறிவித்தால், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, மாஜி., அமைச்சர் சம்பத் எச்சரித்துள்ளார்.
கடலுாரில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில், கடந்த 33 மாத கால தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத வகையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க., வில் ஜாபர் சாதிக் அயலக அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தி.மு.க., வினர் ஏஜென்சி நடத்தி போதை பொருள் விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து குப்பைக்கு வரி போட்டுள்ளனர். உடனடியாக குப்பை வரியை வாபஸ் பெற வேண்டும். என்.எல்.சி., சேர்மன் நெய்வேலியில் சிறிய அணு உலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நிலக்கரி எடுத்து மின்சாரம் தயாரிக்க மட்டும் தான் விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்கி உள்ளனர். அணு உலை அமைத்தால், அணுக்கழிவை எங்கே கொண்டு செல்வது. நெய்வேலி பொன் விளையும் பூமி. அணு உலை அமைக்கப்படும் என அறிவித்தால், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

