/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
/
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 10, 2026 06:55 PM

திட்டக்குடி:தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் எனக்கூறி, அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரித்தார்.
திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் முருகுமாறன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று அவர் கொடிகளம், திருவட்டத்துறை, கூடலுார், கூ.குடிக்காடு, செங்கமேடு, தொ.குடிக்காடு, தொளார், புத்தேரி, ஆதமங்கலம், சாத்தநத்தம், மேலுார், ஏ.அகரம், மருதத்துார், வடகரை, நந்திமங்கலம், அருகேரி, கொத்தட்டை, இறையூர், பெ.பொன்னேரி உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம் அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி மற்றும் அடிப்படை பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் எனக்கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அ.தி.மு.க., நல்லுார் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து, பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ் அழகன், பா.ம.க., ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், பா.ஜ., ஒன்றிய தலைவர் மணிமேகலை, அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அருள், தொகுதி பொறுப்பாளர் பெரியசாமி உடனிருந்தனர்.