/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் ஜெ., சிலை: பழனிசாமி திறந்து வைப்பு
/
நெய்வேலியில் ஜெ., சிலை: பழனிசாமி திறந்து வைப்பு
ADDED : பிப் 23, 2024 12:21 AM

நெய்வேலி: நெய்வேலியில், ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலையை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அ.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்டம் மற்றும் என்.எல்.சி., அண்ணாதொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 13, செவ்வாய்சந்தை அருகே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை 9.2 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்,முன்னாள் அமைச்சர்கள் சம்பத், சண்முகம், உதயகுமார், மோகன், செல்வி ராமஜெயம், வைகைசெல்வன், தாமோதரன் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.,க் கள் அருண்மொழிதேவன், பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்பிரமணியன், முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம், குமரகுரு,தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன், இணை செயலாளர் சூரியமூர்த்தி, என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் தலைவர் வெற்றிவேல், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் தேவானந்தன், அலுவலக செயலாளர் ஜோதி, மாவட்ட ஜெ.,பேரவைசெயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், பேராசிரியர்கள் வேல்முருகன், கோவிந்தராஜன், வல்லம் வடிவேல், புவனகிரி ஒன்றிய துணை சேர்மன்வாசுதேவன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அன்பு,பொதுக்குழு உறுப்பினர் சத்யா அன்பு, மாவட்ட துணை தவைர் கோவிந்தராஜ். வடலுார் நகர செயலாளர் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செலாளர் திருமலைவாசன், அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் நாகபூஷணம், கடலுார் வடக்கு மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் கனகராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், கடலுார் தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் காடாம்புலியூர் கார்த்திகேயன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் ராஜசேகர், வடலுார் நகர இணை செயலாளர் சத்தியாகலா ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தெற்கு மாவட்ட எல்லையான பனிக்கன்குப்பத்தில்மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.