/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் பா.ம.க., பொதுக் கூட்டம் திரளாக பங்கேற்க அழைப்பு
/
வடலுாரில் பா.ம.க., பொதுக் கூட்டம் திரளாக பங்கேற்க அழைப்பு
வடலுாரில் பா.ம.க., பொதுக் கூட்டம் திரளாக பங்கேற்க அழைப்பு
வடலுாரில் பா.ம.க., பொதுக் கூட்டம் திரளாக பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 26, 2024 05:53 AM

கடலுார்: வடலுாரில் இன்று பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என பா.ம.க., தலைவர் அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தினார். வடலுார் சத்தியஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது எனவும், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், வடலுார் பஸ் நிலையம் அருகில் இன்று (26ம் தேதி) மாலை 4:00 மணிக்கு பா.ம.க., சார்பில் நடக்கும் கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் அன்புமணி எம்.பி., பேசுகிறார்.
எனவே, பொதுக் கூட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள், வணிகர்கள், சன்மார்க்க சங்க நிர்வாகிகள், வள்ளலார் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

