/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணக்குடியில் நிழற்குடை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
மணக்குடியில் நிழற்குடை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : ஜன 11, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே மேலமணக்குடியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் செஞ்சிலட்சுமி, துணை சேர்மன் வாசுதேவன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஒன்றிய துணை செயலாளர் தங்கமணி, கவுன்சிலர் அஞ்சம்மாள், மாணவரணி சிவஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.