ADDED : பிப் 15, 2024 11:59 PM

கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கத்தில் பாபாஜி முதியோர் இல்லம் அறக்கட்டளை திறப்பு விழா நடந்தது.
அறக்கட்டளைத் தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார். தொழிலதிபர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி சங்கர்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
பாபாஜி முதியோர் இல்லம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிவசங்கரி குகநாதன் வரவேற்றார். கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, முதியோர் இல்லம் உரிமையாளரின் தாயார் பூரணம் முனுசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
கடலுார் அழகப்பா நகை மாளிகை உரிமையாளர்கள் அழகப்பா மணி, அஸ்வின் ஆகியோர் முதியோர்களுக்கு உணவு மற்றும் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கினர். ஊராட்சித் தலைவர் சரவணன் வாழ்த்தி பேசினார்.
விழாவில், ஜெயராமன், ஓம்சிவசக்தி டைம்ஸ் ரஜினி விக்னேஷ், வக்கீல் நாகவேந்தன், மணிமொழி, மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் சத்தியமூர்த்தி, கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அழகர் தேவநேசன், செயலாளர் கார்த்திகேயன், அறக்கட்டளை செயலாளர் செல்வராசு பங்கேற்றனர்.