/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
/
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஜன 22, 2024 12:55 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று போகமும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் தனியார் வியாபாரிகளிடமே நெல்லை விற்பனை செய்து வந்தனர்.
அதில் எடையில் தவறு செய்வது, பணம் வழங்குவதில் காலதாமதம் என பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வந்தனர். எனவே நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில் நேற்று நெல்லிக்குப்பத்தில் வாடகை இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
தி.மு.க.,நகர செயலாளர் மணிவண்ணன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.
விவசாயிகள் சங்க செயலாளர் ராமானுஜம்,ராமலிங்கம்,எத்திராஜ்,சீனுவாசன்,எழுத்தர் வளர்மதி,பணியாளர்கள் கார்த்திக்,குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வாடகை இடத்தில் இல்லாமல் வான்பாக்கம் செல்லும் வழியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரியுள்ளனர்.