ADDED : நவ 10, 2024 06:50 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறையில் புதுப்பிக்கப்பட்ட உழவர் பயிற்சி கூட திறப்பு விழா நடந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல உழவியல் துறையில் ராஷ்ட்ரிய உச்சதர் சிக் ஷா அபியான் நிதியுதவியின் மூலம் புதுப்பிக்கப்பட்ட 'பேராசிரியர் லட்சுமணன்' உழவர் பயிற்சி கூட திறப்பு விழா நடந்தது. உழவியல் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவில், துறை தலைவர் சுந்தரி வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பயிற்சி கூடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார், வேளாண் புல முதல்வர் அங்கையற்கண்ணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தொடர்ந்து, உழவியல் துறையின் ஆராய்ச்சி பண்ணையில் அரை ஏக்கர் பரப்பளவில், புதுப்பிக்கப்பட்ட மீன் குட்டையில் துணை வேந்தர் கதிரேசன் மீன் குஞ்சுகள் விட்டார். துறை தலைவர்கள் மற்றும் துணைவேந்தர் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.
உழவியல் கூட்டமைப்பு செயலர் மெய்யப்பன் நன்றி கூறினார்.