UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:56 PM
கடலுார்: குறிஞ்சிப்பாடியில் சிங்கபுரி தொழில் மேம்பாட்டு மன்றம் துவக்க விழா நடந்தது.
தொழில் மேம்பாட்டு மன்ற இயக்குநர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'மத்திய, மாநில அரசுடன் இணைந்து கிராமத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிதாக தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்களுக்கு வழிகாட்டும் நிறுவனமாக சிங்கபுரி தொழில் மேம்பாட்டு மன்றம் செயல்பட உள்ளது. நீர்நிலைகளை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார். கூட்டத்தில், நடேசன், சிவக்குமார், புதுச்சேரி அரசின் முன்னாள் நீர்வளத் துறை தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக அரசின் முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, முன்னாள் அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல மேலாண் இயக்குனர் கருணாநிதி, ரவி, கார்த்திகேயன், சுப்பிரமணியன், கிருபா, மணி பங்கேற்றனர்.
