/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவந்திபுரம் கோவிலில் திருமண மண்டபம் திறப்பு
/
திருவந்திபுரம் கோவிலில் திருமண மண்டபம் திறப்பு
ADDED : நவ 13, 2024 09:16 PM

கடலுார்; திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் புதியதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை, காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
கடலுார், அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2.80 கோடியில், புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், திருமண மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அப்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், பி.ஆர்.ஓ., நாகராஜபூபதி, செயல் அலுவலர் வெங்டேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.