/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோண்டூரில் மருத்துவ முகாம் எம்.எல்,ஏ., துவக்கி வைப்பு
/
கோண்டூரில் மருத்துவ முகாம் எம்.எல்,ஏ., துவக்கி வைப்பு
கோண்டூரில் மருத்துவ முகாம் எம்.எல்,ஏ., துவக்கி வைப்பு
கோண்டூரில் மருத்துவ முகாம் எம்.எல்,ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 29, 2024 06:07 AM

கடலுார்,: கடலுார் தி.மு.க., சார்பில்,முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம், கோண்டூரில் நடந்தது.
கடலுார் எம்.எல்.ஏ அய்யப்பன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் சிறப்பு மருத்துவர்கள், பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். தேர்வு செய்யப்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்தனர்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ஊராட்சி தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் சாந்திபழனிவேல், முன்னாள் ஒன்றிய உறுப்பினர் ஜோதி, ரவிராஜ், பரத், கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், மாயவன், சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.