/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய தீயணைப்பு அலுவலகம் கடலுாரில் திறப்பு விழா
/
புதிய தீயணைப்பு அலுவலகம் கடலுாரில் திறப்பு விழா
ADDED : பிப் 17, 2024 11:54 PM

கடலுார்: கடலுாரில் ரூ. 4. 43 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய தீயணைப்புத் துறை அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கடலுார் பீச் ரோட்டில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகம் 1942ல் கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடம் கட்ட கடந்த 2020-21ம் ஆண்டு, ரூ. 4 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில், புதிய அலுவலகம், 5 தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், மாவட்ட அலுவலர் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டன. கட்டுமான பணிகள் 2022 பிப்ரவரியில் துவங்கி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிக்கப்பட்டது.
புதிய ஒருங்கிணைந்த தீயணைப்புத் துறை அலுவலகத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது கடலுார் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் கிரேசி லிவிங்ஸ்டன், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் குமார், அலுவலர்கள் விஜயக்குமார், ஆறுமுகம் மற்றும் தியணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.