ADDED : மே 21, 2023 05:27 AM

நெய்வேலி, : என்.எல்.சி., இந்தியா நிறுவனம் உதயமான தினத்தையொட்டி, நெய்வேலி நகரத்தின் புதிய நுழைவு வாயிலை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார்.
என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் உதய தின விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். இயக்குனர்கள் மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, நெய்வேலி நகரியத்திற்கு நுழையும், புதிய நுழைவு வாயில் ரூ 3.25 கோடி செலவில் 22.54 மீட்டர் அகலம், 10.85 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. புதிய நுழைவு வாயிலை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், என்.எல்.சி., நிறுவனத்தின் முன்னாள் சேர்மன்கள் நாராயணன், சகாய், பிரசன்ன குமார், சுரேந்திர மோகன், ஆச்சார்யா மற்றும் முன்னாள் இயக்குனர்கள் பாபுராவ், ரவீந்திரநாத், ஆர்.என்.சிங், சேதுராமன், செல்வகுமார், விக்ரமன், தங்கபாண்டியன், ஷாஜி ஜான், என்.எம். ராவ், என்.எல்.சி., முன்னாள் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி வெங்கட சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

