/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொல்லிருப்பு கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா
/
கொல்லிருப்பு கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா
ADDED : செப் 24, 2024 06:12 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கொல்லிருப்பு கிராமத்தில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
கம்மாபுரம் ஒன்றியம், கொல்லிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட கைகளர்குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 9.80 லட்சம் ரூபாயில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
பி.டி.ஓ.,க்கள் குமரன், சங்கர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். ரேஷன் கடை கட்டடத்தை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொது மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கினார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், ஊராட்சி துணைத் தலைவர் சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.