/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.68 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைப்பு
/
ரூ.68 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைப்பு
ரூ.68 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைப்பு
ரூ.68 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைப்பு
ADDED : நவ 15, 2024 04:30 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி பகுதியில் ரூ. 68 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 4 பூங்காக்களை, நகரமன்ற தலைவர் செந்தில்குமார் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சிதம்பரம் நகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகிசன் நகர் பூங்கா ரூ. 20 லட்சம், கனகசபை நகர் பூங்கா ரூ. 19 லட்சம், மன்மதன்சாமி நகரில் ரூ. 18 லட்சம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், காந்தி பூங்கா ரூ. 11 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு, நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 68 லட்சம் மதிப்பில் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டு, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கமிஷனர் மல்லிகா தலைமை தாங்கினார். பொறியாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் ரமேஷ், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகரமன்ற தலைவர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு புங்காக்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ஷகிலா இஸ்மாயில், கவிதா சரவணன், புகழேந்தி, இந்துமதி அருள், அசோகன், லதா, கல்பனா சண்முகம், சுதா, பூங்கொடி, வளர்மதி, நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.