/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலையரங்கம் கட்டுமான பணி துவக்கி வைப்பு
/
கலையரங்கம் கட்டுமான பணி துவக்கி வைப்பு
ADDED : டிச 12, 2024 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்; வேப்பூர் அருகே கலையரங்கம் கட்டுமானப் பணியை நல்லூர் மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.
வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தில் கலையரங்கம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நல்லூர் மாவட்ட கவுன்சிலர் நிதியில், ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியை நல்லூர் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம் பூமி பூஜையுடன் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, முன்னாள் ஊராட்சி தலைவர் அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் சோலை ராஜன், தி.மு.க., கிளை செயலர்கள் சுப்ரமணியன், கனகசபை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.