/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளியில் இளைஞர் காவல்படை துவக்க விழா
/
அரசு பள்ளியில் இளைஞர் காவல்படை துவக்க விழா
ADDED : மார் 08, 2024 06:38 AM

புதுச்சத்திரம் : பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் காவல்படை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருண் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், குழந்தைகள் நல அலுவலர் காளிதாசன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் அனந்தகுமார் பங்கேற்று, மாணவர்கள் எவ்வாறு குற்றங்களை தடுப்பது மற்றும் கண்டுபிடிப்பது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, போதைப் பொருட்கள், சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அறிவுரைகள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் சிறப்பு சப். இன்ஸ்பெக்டர்கள் சுமதி, ஈஸ்வரி, தலைமை காவலர் தாட்சாயிணி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

