/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகள் அதிகரிப்பு: விதிமீறலை தடுக்க நடவடிக்கை தேவை
/
பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகள் அதிகரிப்பு: விதிமீறலை தடுக்க நடவடிக்கை தேவை
பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகள் அதிகரிப்பு: விதிமீறலை தடுக்க நடவடிக்கை தேவை
பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகள் அதிகரிப்பு: விதிமீறலை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 08, 2024 05:48 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கோ.பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகில் இருந்து, வேப்பூர் மார்க்கமாக மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை, புறவழிச்சாலை போடப்பட்டது. இதன் மூலம் திருச்சி, கடலுார், சேலம் மார்க்க வாகனங்கள், புறவழிச்சாலையில் எளிதில் சென்று வருகின்றன. இதற்காக, கோ.பொன்னேரி, சித்தலுார் பகுதிகளில் ரவுண்டானா போடப்பட்டது.
அதில், கோ.பொன்னேரி ரவுண்டானா வழியாக கம்மாபுரம், சேத்தியாதோப்பு, புவனகிரி, சிதம்பரம், பூம்புகார் மார்க்கமாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், ரவுண்டானாவில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி விபத்துகள் நிகழ்ந்தன. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், அப்போதைய எஸ்.பி., ராதிகா உத்தரவின்படி, தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அதன்பின், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால், கோ.பொன்னேரி ரவுண்டானா விரிவாக்கம் செய்யப்பட்டது. நான்குபுறம் மற்றும் நகருக்கு வெளியே, உள்ளே வாகனங்கள் எளிதில் சென்று வர ஐலேண்ட் வடிவ தடுப்புகள், ைஹமாஸ் விளக்குகள் போடப்பட்டன.
இருப்பினும், விதிமீறல் காரணமாக ரவுண்டானாவில் விபத்துகளை தடுக்க முடியவில்லை. நெடுந்துார வாகன ஓட்டிகள் ரவுண்டானா ைஹமாஸ் விளக்கை சுற்றி செல்லாமல், வலது மற்றும் இடதுபுறம் திடீரென எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உயிரிழப்பு அபாயம் உள்ளது.
இந்நிலையில், கடலுார் - விருத்தாசலம் மார்க்கத்தில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து சித்தலுார் ரவுண்டானா வரை 4.3 கி.மீ., தொலைவிற்கு 46 கோடி ரூபாயில் புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியால் ரவுண்டானா இருபுறம் மழைநீர் வடிகால், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் முழுமை பெறாமல் கிடந்தன.
தற்போது பணிகள் தீவிரமெடுத்துள்ள நிலையில், ரவுண்டானாவில் போடப்பட்டிருந்த ஐலேண்ட் வடிவ சென்டர் மீடியன் உட்பட தடுப்புகள் சேதமடைந்துள்ளன. எனவே, புறவழிச்சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதுபோல், பொன்னேரி ரவுண்டானா வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், ரவுண்டானா நான்கு திசையிலும் எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும்.