/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை அதிகரிப்பு
/
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை அதிகரிப்பு
ADDED : செப் 20, 2025 06:51 AM
கடலுார் : கடலுார் மாநகராட்சி எல்லை பகுதிகளில் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிருபா நிதி திட்டத்தில் கடன் தொகை அதிகரிகத்து வழங்கப்படுகிறது என, மாநகராட்சி கமிஷனர் முஜிப்பூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
கடலுார் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிருபா நிதி திட்டத்தின் மூலம் மேபடுத்தப்பட்ட கடன் கட்டமைப்பில் முதல் தவணை கடன் 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாகவும், 2வது தவணையாக கடன் 20,000 ரூபாய் முதல், 25,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் மூன்றாவது தவணை மட்டும் 50,000 ரூபாய் மாற்றம் இன்றி உள்ளது.
யு.பி.ஐ.யுடன் இணைந்த ரூபே கடன் அட் டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர வணிக, தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கான கடன் வாய்ப்புகளை சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கும்.
மேலும் டிஜிட்டல் முறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் சாலையோர வியாபாரிகள் சில்லறை மொத்த பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்காக 1,600 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை பெறலாம்.
இது தொடர்பான சிறப்பு முகாம் கடந்த 17ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை கடலுார் மாநகாட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது.