/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடும் பனிப்பொழிவால் இருமல், சளியால் அவதி
/
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடும் பனிப்பொழிவால் இருமல், சளியால் அவதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடும் பனிப்பொழிவால் இருமல், சளியால் அவதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடும் பனிப்பொழிவால் இருமல், சளியால் அவதி
ADDED : பிப் 07, 2024 11:58 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தது. தற்போது பனிக்காலம் துவங்கியுள்ளதால் மக்களுக்குசளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி என பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாற்பது வயதுக்கு மேல்கடந்துவிட்டவர்கள் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவது சகஜமாகிவிட்ட இக்காலத்தில் தினமும் காலையில்நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசும் நடை பயிற்சியை வலியுறுத்தி வருகிறது.இதனால் அதிகாலை முதல் நடைபயிற்சிக்கு செல்பவர்களுக்கு பனி தொல்லையால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
முதலில் சளி, தொடர்ந்து இருமல், வீசிங் என படிப்படியாக தொல்லை கொடுத்து இறுதியில் காய்ச்சலில் முடிகிறது.
காய்ச்சல் வந்தபின்னும் ஓரிரு நாட்களில் இருந்து விடுபட முடியவில்லை. தொடர்ந்து காய்ச்சல் 7 முதல் 8 நாட்கள் வரை நீடிக்கிறது. காய்ச்சலுக்குபின் முட்டி வலி, உடல்வலி, வாய் கசப்பு என தொடர்ந்து ஓய்வு எடுக்கும்படியான நிலை தொடர்கிறது.
ஒரு வீட்டில் ஒருவருக்குகாய்ச்சல் தொற்று இருந்தால் அக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எளிமையாக தொற்றி விடுகிறது.இதிலும் ஒரு சிலருக்கு நிமோனியா காய்ச்சல், டைபாய்டு, வைரல் ஜூரம் என பல்வேறு வகையான காய்ச்சல்களால்பாதிக்கப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்
ஏராளமானோர் 'கியூ' வில் நின்று மருத்துவரை பார்க்கும் அவல நிலை உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா ராணி கூறியதாவது:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் எங்கள் சுகாதார குழுவை அனுப்பி ரத்தம் சோதனை செய்து சிகிச்சை அளித்து வருகிறோம்.காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அவர்கள் ரத்தப்பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

