/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
ADDED : செப் 30, 2024 06:12 AM

கிள்ளை: வார விடுமுறை நாள் என்பதால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலுடன், மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து, இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செல்கின்றனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படும்.
நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகில் செல்ல முடியாதவர்கள், பார்வை கோபுரத்திற்கு சென்று அங்கியிருந்தப்படி இயற்கையான காடுகளை கண்டு ரசித்து சென்றனர்.