sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மந்தாரக்குப்பத்தில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள்... அதிகரிப்பு:வாகன ஓட்டிகள் அச்சம் களைய நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பத்தில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள்... அதிகரிப்பு:வாகன ஓட்டிகள் அச்சம் களைய நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பத்தில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள்... அதிகரிப்பு:வாகன ஓட்டிகள் அச்சம் களைய நடவடிக்கை தேவை

1


UPDATED : மே 07, 2026 09:10 PM

ADDED : மே 07, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2026 09:10 PM ADDED : மே 07, 2026 09:01 PM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களால் வாகன ஒட்டிகள் அச்சமடைந்து வருவதால் தேவையான முனனெச்சரிக்கை நடவடிக்கைளை அதிகாரிகள் மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பிறகு, மந்தாரக்குப்பம் பகுதி வழியாக கார், வேன், பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன.

இப்பகுதியில், நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்கு பிறகு வாகனங்களின் வேகம் அதிகரித்து விட்டதால் தினசரி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளில் ஏராளமனோர் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் குறுக்கு சாலைகளால் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. ஏராளமான குறுக்கு சாலைகள் வழியாக வாகனங்கள் வருவதை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் நான்கு வழிச்சாலை குறுகலாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. கடைவீதியில் இருபுறமும் கடைகள் மீண்டும் ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி, வாகன விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுகிறது.

சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

இருசக்கர வாகனங்களில் பெரும்பாலும் ெஹல்மட் அணியமாலும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமால் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது.

இது குறித்து பொதுமக்கள், வாகனஒட்டிகள், வியாபாரிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விபத்துக்களை தடுக்க மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் குறவன் குப்பம் முதல் ரோமாபுரி வரை நான்கு வழிச்சாலை அமைத்து சாலையை அகலப்படுத்தி, 'சென்டர் மீடியன்' வசதியுடன், சாலை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைப்பதற்காக, 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை துறை தேவையில்லாமல் அதிகமாக குறுக்கு சாலைக்கு இடைவெளி விட்டுள்ளதால் வாகனங்கள் சாலையில் செல்லும் போது, 'திடீர்' என புகுந்து வரும் வாகனங்களால் இப்பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

மேலும், சென்டர் மீடியனில் தெருவிளக்கு இல்லாததால் இச்சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தம்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்டர் மீடியனில் பல்வேறு இடங்களில் உள்ள தேவையற்ற குறுக்கு வழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு சுவர் அமைக்கவும், சென்டர் மீடியனில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்கினால் பெரும்பலான விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us