தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் அதிகாரிகள் நடவடிக்கை தேவை 

 அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் அதிகாரிகள் நடவடிக்கை தேவை 

 அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் அதிகாரிகள் நடவடிக்கை தேவை 


ADDED : ஏப் 24, 2026 09:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 09:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பிறகு, இப்பகுதிகளில் தினசரி தொடரும் சாலை விபத்துக்களால் கடந்த சில ஆண்டுகளில், ஏராளமனோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.

மந்தாரக்குப்பம் கடைவீதி பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பு மற்றும் ஏராளமான குறுக்கு சாலைகளால் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.

இதனால் வாகன ஒட்டிகள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஒட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.

இது குறித்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

போலீசார் தேசிய நெடுஞ்சாலை கடை வீதியில் சாலை அருகே கயிறு அமைத்து அதைத் தாண்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது; ரிப்ளக்டிங் ஸ்டிக்கர் ஒட்டுவது, பொதுமக்கள், மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வாகன விபத்துக்களை தடுக்க மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us