/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி
/
கடலுாரில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 13, 2025 05:33 AM

கடலுார் : கடலுாரில் கோட்ட அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும், தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் துவங்கிய பேரணியை கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசுகையில், 'அஞ்சல் துறை மூலமாக அனைத்து தபால் அலுவலகங்களில் 25 ரூபாய்க்கு தேசியக் கொடி விற்பனை வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, கண்காணிப்பாளர் கலைவாணி கூறினார்.
துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, தபால் அலுவலக ஆய்வாளர்கள் வடிவேலன், பழனிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.