/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தின விழா கோலாகலம்: ரூ. 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தின விழா கோலாகலம்: ரூ. 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தின விழா கோலாகலம்: ரூ. 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தின விழா கோலாகலம்: ரூ. 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 16, 2024 06:12 AM

மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. .
9:05 மணிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வருகை தந்தார். அவரை எஸ்.பி., ராஜாராம் வரவேற்று கொடி மேடைக்கு அழைத்து சென்றார்.
கலெக்டர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சமாதானத்தை குறிக்கும் வகையில், வெண்புறாக்கள் மற்றும் மூவர்ண நிறத்திலான பலுான்களை பறக்கவிட்டார்.
தொடர்ந்து, கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமை ஏற்று நடத்திய காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 194 அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னாள் படைவீர் நலத்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு 31,000 ரூபாய் மதிப்பிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 28 பயனாளிகளுக்கு 17.18லட்சம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு 70 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு 33,450 ரூபாய் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு 68,318 மதிப்பிலும், தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு 7,000 ரூபாய் மதிபிலும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு 2,50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு 3.66 லட்சம் ரூபாய் மதிப்பிலும் என மொத்தம் 78 பயனாளிகளுக்கு 94.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து ஆரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குளோபல் ஸ்பெஷல் பள்ளி, புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரிராஜா, கமிஷனர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திட்ட இயக்குநர் சரண்யா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.