ADDED : ஆக 16, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி, ஆக.17-
குறிஞ்சிப்பாடி முழு நேர கிளை நூலகத்தில், 80வது சுதந்திர தின விழா, தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது. வாசகர் வட்ட தலைவர் கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வந்தே மாதரம் பாடப்பட்டு போட்டி தேர்வு மாணவி செல்வி நிஷாந்தி தேசபக்தி பாடல் பாடி சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நிகழ்வில் நல் நூலகர் விருது பெற்ற குறிஞ்சிப்பாடி நூலகர் அருள்ஜோதி, நூலகர்கள் குமார், லட்சுமி, நூலகப் பணியாளர்கள் திருஞானம், பரமேஸ்வரி மற்றும், வாசகர்களும், போட்டித் தேர்வு மாணவர்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர் (ஓய்வு) லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.
