/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நகராட்சியில் சுதந்திர தின விழா
/
சிதம்பரம் நகராட்சியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:21 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் சுதந்திர தின விழா நடந்தது.
சேர்மன் செந்தில்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், துணைத் தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், மக்கின், சரவணன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளர் அருள் பங்கேற்றனர்.
சிதம்பரம் வீனஸ் துவக்கப் பள்ளியில் தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். துணைத் தாளாளர் ரூபியா ராணி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லியோ பெஸ்கி ராவ் வரவேற்றார். கிருஷ்ணா பல் மருத்துவமனை டாக்டர் முருகன் தேசியக்கொடி ஏற்றினார். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். பொறியியல் துறை தலைவர் அகிலன் வரவேற்றார். முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். எம்.ஆர்.கே., நினைவு அறக்கட்டளை தாளாளர் தெய்வசிகாமணி தேசிய கொடியேற்றினார்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் சுதந்திரதின சிறப்பு அணிவகுப்பு நடத்தினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சித்திவிநாயகம் உறுதிமொழி வாசிக்க, மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் கொளஞ்சி நன்றி கூறினார்.