/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார், நெய்வேலியில் சுதந்திர தின விழா
/
வடலுார், நெய்வேலியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:22 AM

மந்தாரக்குப்பம்: ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களில் சுதந்திர தின விழா நடந்தது.
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும நிறுவனர் ஜெய்சங்கர் தேசிய கொடியேற்றினார்.
நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியில் இயக்குநர் தினேஷ், தேசிய கொடியேற்றினார். கிரீன் பார்க் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தியா என்ற வடிவமைப்பை உருவாக்கி மரியாதை செலுத்தினர். திருப்பயர், கோபாலபுரம், தொழுதுார், திரிபுரநேணி பள்ளியிலும் சுதந்திர தின விழா நடந்தது.
வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கி மாணவர் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார். தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி வரவேற்றார். ராஜா வெங்கடேசன், தேசிய கொடியேற்றினார். பள்ளி நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன் பேசினார்.
உதவி தலைமையா ஆசிரியர் வேலவன், ஆசிரியர்கள் செல்வி, பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வீராசாமி, பாலமுருகன், செந்தில்குமார், தனசேகர், நாராயணன், வெற்றிச்செல்வன் செய்திருந்தனர்.
சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரேணுகா கண்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் டி.எஸ்,.பி., லாமேக் தேசியக் கொடியேற்றினார். நடனம், பரதம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.