ADDED : ஆக 16, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
கடலுார், ஆக. 17–
கடலுார் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கத்தின் சார்பாக நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்க அலுவலகத்தின் முன் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
இதில் சங்கத்தின் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற சுபேதார்கள் ஜெயராமன், பொருளாளர் சுப்பு, செயலாளர் ஹவில்தார் இளவரசன், துணை செயலாளர் மதியழகன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
