/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுதந்திர தின ஏற்பாடுகள்: கலெக்டர் ஆலோசனை
/
சுதந்திர தின ஏற்பாடுகள்: கலெக்டர் ஆலோசனை
ADDED : ஆக 02, 2025 07:41 AM

கடலுார் : சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 79வது சுதந்திர தினவிழா வரும் 15ம் தேதி அண்ணா விளயைாட்டரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
கொடிமேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்க வேண்டும்.
விழாப்பகுதியை வர்ணம் பூசி அழகுபடுத்தி, மைதானத்தை விழாவுக்கு தயார்படுத்த வேண்டும்.
முக்கிய விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சியை காண வருகை தரும் பொதுமக்களுக்கு இருக்கை வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
போக்குவரத்து சீரமைப்பு, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். கடலுார் பஸ் நிலையத்திலிருந்து விழா மைதானத்திற்கு சிறப்பு பஸ் 15ம் தேதி காலை 6:30 மணி முதல் 11.00 மணி வரை இயக்க வேண்டும்.
நலத்திட்ட உதவிபெறும் பயனாளிகள் பட்டியல் தயாரித்தல், பயனாளிகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் மைதானத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், நேர்முக உதவியாளர் (பொது) ரவி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.